நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கும்பக்கரை அருவி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மல
பெரியகுளம்,
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கும்பக்கரை அருவிதேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் மிகுந்த இடத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து இந்த அருவிக்கு நீர்வரத்து இருக்கும். அருவியில் தண்ணீர் கொட்டும் சமயங்களில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளிப்பார்கள்.
இதனால் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் கும்பக்கரை அருவிக்கு வந்து குளித்து மகிழ்வார்கள். இந்த நிலையில் அருவி பகுதி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதன் எதிரொலியாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
குளிக்க தடைஎனவே அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இதனால் நேற்று கும்பக்கரை அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.