திருமணமான ஒரு மாதத்தில் 2 குழந்தைகளின் தாயுடன் புதுமாப்பிள்ளை ஓட்டம் போலீசார் வலைவீச்சு
நெல்லையில் திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை, 2 குழந்தைகளின் தாயுடன் ஓட்டம் பிடித்தார். அந்த ஜோடியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:–
புதுமாப்பிள்ளை
நெல்லை சந்திப்பு தெற்கு பாலபாக்யா நகரை சேர்ந்தவர் சண்முகராஜ்(வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கும் பேச்சியம்மாள் என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 3–ந் தேதி வீட்டில் இருந்த சண்முகராஜ் திடீரென்று காணாமல் போனார். அப்போது திருமணத்தின்போது அவருக்கு அணிவிக்கப்பட்ட தங்க மோதிரம், கைச்சங்கிலி உள்ளிட்ட நகைகளையும் அவர் எடுத்துச் சென்று விட்டார்.
இதையடுத்து உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மனைவி பேச்சியம்மாள் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கள்ளக்காதல்
போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. சண்முகராஜூக்கும் அதே பகுதியே சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அந்த பெண்ணுடன் சண்முகராஜ் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். திருமணத்துக்கு பிறகும் அந்த பெண்ணின் கள்ளக்காதலை சண்முகராஜூவால் கைவிட முடியவில்லை.
இதனால் புதுமனைவியை விட்டு, விட்டு, கள்ளக்காதலியுடன் செல்ல முடிவெடுத்து உள்ளார். இதனைத்தொடர்ந்து இருவரும் ஊரைவிட்டு ஓட்டம் பிடித்து வெளியே சென்று ரகசியமாக குடும்பம் நடத்தி வருகின்றனர். சண்முகராஜூடன் ஓட்டம் பிடித்த அந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த விவரங்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சண்முகராஜ் மற்றும் அவருடைய கள்ளக்காதலியை தேடி வருகின்றனர்.