திருவண்ணாமலையில் இலவச மருத்துவ–யோகா பயிற்சி முகாம்

சர்வதேச யோகா 3–ம் ஆண்டு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் இலவச மருத்துவ மற்றும் யோகா பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2017-06-16 00:09 GMT

திருவண்ணாமலை,

சர்வதேச யோகா 3–ம் ஆண்டு தினத்தையொட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் இலவச மருத்துவ மற்றும் யோகா பயிற்சி முகாம் நடந்தது. இதனை புதுடெல்லியில் உள்ள மத்திய அரசுசின் ஆயுஷ் அமைச்சக ஆராய்ச்சி மையம், திருவண்ணாமலை சாய்சேவா யோகா இயற்கை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடத்தின.

முகாமிற்கு சாய்சேவா யோகா இயற்கை மருத்துவமனை தலைமை மருத்துவர் எழில்மாறன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் புகழேந்தி வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கலந்து கொண்டு பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த பரிசோதனை, மருத்துவ மற்றும் உணவு ஆலோசனை, சிகிச்சைகள் மற்றும் யோகா பயிற்சி ஆகியவற்றை இயற்கை மருத்துவமனை டாக்டர்கள் கிருபாநிதி எழில்மாறன், பாரதி கண்ணம்மாள், பிரியா, சிவகாமிசுந்தரி, சுபா, பிரியங்கா, லட்சுமி ஆகியோர் அளித்தனர். முகாமில் மாவட்ட யோகா நலச்சங்க செயலாளர் பா.இந்திரராஜன், பயிற்சியாளர் சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்