என்.ஆர்.காங்கிரஸ்–அ.தி.மு.க. வெளிநடப்பு

புதுவை சட்டசபையில் வேளாண்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில் அளிக்கும்போது அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எழுந்து,

Update: 2017-06-15 23:58 GMT

புதுச்சேரி,

 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அறிவிக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கமலக்கண்ணன் வறட்சி பாதிப்புகளை பார்வையிட்டு சென்ற மத்தியக்குழு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளதாகவும், விரைவில் கடந்த ஆண்டைவிட கூடுதல் நிவாரணம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆனால் அவரது பதிலில் திருப்தியடையாத அன்பழகன் எம்.எல்.ஏ., விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அறிவிக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு சக எம்.எல்.ஏ.க்களான அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோருடன் சபையை விட்டு வெளியேறினார். அதேபோல் விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்காததை கண்டித்து என்.ஆர்.காங்கிரசும் வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ. வெளியேறினார். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. டி.பி.ஆர்.செல்வம் சட்டசபையை விட்டு வெளியேறாமல் சபைக்குள்ளேயே அமர்ந்திருந்தார்.


மேலும் செய்திகள்