தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்தக்கோரி மாணவர்கள் முற்றுகை
தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரி தஞ்சை முதன்மைக்கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
கட்டாய கல்வி உரிமை சட்டத்தை 25 சதவீதம் அனைத்து தனியார் பள்ளிகளிலும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கல்வி உதவித்தொகை கூடுதலாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார்.
போராட்டத்தின் போது முதன்மைக்கல்வி அலுவலகத்திற்குள் நுழைய மாணவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் போலீசார் இரும்பு கம்பியால் ஆன தடுப்புகளை அமைத்து அவர்கள் உள்ளே சென்றுவிடாமல் தடுத்து நிறுத்தினர். இருந்தாலும் சிலர் தடுப்புகளை அகற்ற முயன்றனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் தரையில் அமர்ந்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.
33 பேர் கைது
அப்படி இருந்தும் மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். இதனால் மாணவர்களை கைது செய்த போலீசார், அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றினர். இதில் ஒரு பெண் உள்பட 33 பேர் கைது செய்யப்பட்டனர். இதன்காரணமாக அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.