பருவமழையையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 4 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன
தென்மேற்கு பருவமழையையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 4 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.;
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர் களுடனான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,
பெரம்பலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையையொட்டி பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் முன்எச்சரிக்கை குழு, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பொதுமக்களை வெளியேற்றி பாதுகாத்திடும் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு, மழைக்காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லும் வகையில் நிவாரணம் மற்றும் பாதுகாப்பு உறைவிடம் நிர்வகிக்கும் குழு என மொத்தம் 4 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பணிகளை மேற்பார்வையிட 8 அலு வலர்களை கொண்டு மண்டல அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 141 அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவன தன்னார்வலர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு பேரிடர் காலப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
தொலைபேசி எண்
தென்மேற்கு பருவமழை காலத்தில் பேரிடர் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்திட ஏதுவாக பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள சமுதாயக்கூடங்கள், பள்ளி மற்றும் திருமண மண்டபங்கள் என பொதுமக்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் கொண்ட கட்டிடங்கள் தேர்வுசெய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளில் தேவையான அளவு உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அனைவரும் தென்மேற்கு பருவமழையினால் ஏற்படும் சேதங்கள் குறித்து 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பாஸ்கரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.