திருவள்ளூர் அருகே ஆஸ்திரேலிய ஆந்தை பிடிபட்டது
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் எம்.ஜி.நகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யா.
திருவள்ளூர்,
இவரது வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தின் மேல் நேற்று முன்தினம் மாலை ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆந்தை ஒன்று அமர்ந்திருந்தது. இதை பார்த்த காகங்கள் அந்த ஆந்தையை சுற்றி சுற்றி வந்து கொத்தியது. அந்த ஆந்தை சத்யா வீட்டுக்குள் புகுந்து கொண்டது. இது பற்றி அவர் திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து நிலைய அலுவலர் வில்சன்ராஜ்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அந்த ஆந்தையை மீட்டு அதை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.