தபால்துறை ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் நியமனத்துக்கு நேர்காணல் கோவில்பட்டியில், 22–ந்தேதி நடக்கிறது

கோவில்பட்டியில், தபால்துறை ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் நியமனத்துக்கான நேர்காணல் வருகிற 22–ந் தேதி நடக்கிறது.

Update: 2017-06-15 19:45 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டியில், தபால்துறை ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் நியமனத்துக்கான நேர்காணல் வருகிற 22–ந் தேதி நடக்கிறது.

ஆயுள் காப்பீடு முகவர்கள்

இந்திய தபால்துறை கோவில்பட்டி கோட்டத்தில் ஆயுள் காப்பீடு வணிகம் செய்ய நேரடி முகவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப படிவத்தை அருகில் உள்ள தபால்துறை அலுவலகம் மூலம் பெற்று கொள்ளலாம். 18 வயது முதல் 60 வயது வரையிலான வேலை இல்லாதவர்கள், சுயதொழில்புரிவோர், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

5 ஆயிரத்துக்கு குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதியில் வசிப்பவர்கள் 10–ம் வகுப்பும், 5 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட பகுதியில் வசிப்பவர்கள் 12–ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நேர்காணல்


விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் ‘தலைமை தபால் நிலையம், முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி–628501‘ என்ற முகவரிக்கு வருகிற 22–ந்தேதிக்குள் வந்து சேருமாறு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேற்கண்ட முகவரியில் வருகிற 28–ந்தேதி காலை 11 மணிக்கு நேர்காணல் நடக்கிறது. இந்த தகவலை, கோவில்பட்டி தலைமை தபால் நிலைய முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் ராமசாமி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்