கூடங்குளம் அருகே துணிகரம் திருமண விழாவில் சிறுமியிடம் 1½ பவுன் தங்கச்சங்கிலி திருட்டு
கூடங்குளம் அருகே திருமண விழாவில் 3 வயது சிறுமியிடம் 1½ பவுன் தங்கச்சங்கிலி திருட்டு போனது.
வள்ளியூர்,
கூடங்குளம் அருகே திருமண விழாவில் 3 வயது சிறுமியிடம் 1½ பவுன் தங்கச்சங்கிலி திருட்டு போனது. மண்டபத்தின் மாடிக்கு அழைத்துச் சென்று சிறுமியிடம் கைவரிசை காட்டிய மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
3 வயது சிறுமி
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூடுதாழையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). இவரது உறவினர் ஒருவரது திருமணம், வள்ளியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. திருமண விழாவுக்கு தன்னுடைய 3 வயது மகள் ஆண்ட்ரியாவுடன் சென்று கலந்து கொண்டார்.
திருமண விழாவில் சுரேஷ் தன்னுடைய உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமி ஆண்ட்ரியா அருகில் விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் சிறுமியை காணவில்லை. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ், மகளை மண்டபம் முழுவதும் தேடி அலைந்தார்.
தங்கச்சங்கிலி திருட்டு
மண்டபத்தின் மாடியில் சிறுமியின் அழுகுரல் கேட்டது. அங்கு சென்று சுரேஷ் பார்த்தார். சிறுமி ஆண்ட்ரியா மட்டும் தனியாக அழுது கொண்டிருந்தாள். மகளை பார்த்தவுடன் நிம்மதி பெருமூச்சு அடைந்த சுரேஷ், மகிழ்ச்சியில் மகளை தூக்கி கொஞ்சினார்.
அப்போது மகளின் கழுத்தில் அணிந்து இருந்த 1½ பவுன் தங்க சங்கிலி காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ், தங்கச்சங்கிலி திருட்டு குறித்து வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மர்மநபர் கைவரிசை
விசாரணையில், திருமண விழாவுக்கு வந்தவர்களின் கூட்டம் மண்டபத்தில் அதிகமாக இருந்துள்ளது. உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்த சுரேஷ், சிறுமி எங்கு நின்று விளையாடுகிறாள் என்பதை கவனிக்காமல் இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர், சிறுமியை நைசாக மண்டபத்தின் மாடிக்கு அழைத்துச் சென்று தங்க சங்கிலியை மட்டும் பறித்து விட்டு நைசாக தப்பிச் சென்றுள்ளார். மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.