மாற்றுத்திறனாளி குழந்தைகள் அடையாள அட்டைக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை தொடங்குகிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு மருத்துவ முகாம்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு மருத்துவ முகாம் வருகிற நாளை (சனிக்கிழமை) தொடங்குவதாக, கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
சிறப்பு முகாம்கள்
தூத்துக்குடி மாவட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றிட ஒன்றியங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
நடைபெறும் இடங்கள்
மாவட்டத்தில் இந்த மருத்துவ முகாம், தூத்துக்குடி நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளுக்கு சிவந்தாகுளம் அரசு நடுநிலைப்பள்ளியில் நாளையும் (சனிக்கிழமை), கோவில்பட்டி ஒன்றியத்தில் வருகிற 19–ந்தேதி அங்குள்ள வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வருகிற 21–ந்தேதி கருங்குளம் ஒன்றியத்துக்கு, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வருகிற 23–ந்தேதி விளாத்திகுளம் ஒன்றியத்திற்கு அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியிலும் நடத்தப்பட உள்ளது.
அதே போல், வருகிற 27–ந்தேதியன்று ஆழ்வார்திருநகரி ஒன்றியத்தில் மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 29–ந்தேதி ஓட்டப்பிடாரம் ஒன்றியத்துக்கு, அங்குள்ள வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 3.7.2017 அன்று சாத்தான்குளம் ஒன்றியத்தில் கொம்மடிக்கோட்டை சந்தோஷ்நாடார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 5.7.2017 அன்று உடன்குடி ஒன்றியத்தில் கிறிஸ்தியாநகரம் தூ.நா.அ.தி.க ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 7.7.2017 அன்று திருச்செந்தூர் ஒன்றியத்துக்கு திருச்செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 10.7.2017 அன்று ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்துக்கு குமரகுருபரர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 11.7.2017 அன்று புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 12.7.2017 அன்று கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
அடையாள அட்டை
இந்த முகாம்களில் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, பராமரிப்பு உதவி தொகை, கல்வி உதவி தொகை, 3 சக்கர மிதிவண்டி, காதொலி கருவி, மடக்குக் குச்சி மற்றும் முடநீக்கியல் சாதனங்கள், ரெயில் பயண மற்றும் பஸ் பாதுகாவலர் பயண சலுகை சான்று போன்றவற்றை பெற விண்ணப்பிக்கலாம்.
மருத்துவக்குழு ஆலோசனை
மேலும் எலும்பு, மூட்டு சார்ந்த முடநீக்கியல் அறுவை சிகிச்சைகள், செயற்கை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சை, உதட்டுப்பிளவு, அன்னப்பிளவு அறுவை சிகிச்சைகள் மற்றும் உட்காது செவிப்பறை மாற்று அறுவை சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு மருத்துவ குழுவினரால் ஆலோசனை பெறலாம், என மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.