நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளி உபகரணங்களுக்கு சரக்கு, சேவை வரி உயர்வை கண்டித்து நெல்லையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை,

முற்றுகை– ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொடிகளை பிடித்தவாறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் குமாரசாமி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
பின்னர் அவர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:–
சரக்கு சேவை வரி உயர்வு
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பிரய்லி தட்டச்சு எந்திரம், மோட்டார் சைக்கிள், கடிகாரம், காகிதங்கள், காதுகேட்கும் கருவி, ஊன்றுகோல், சக்கர நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் மீது விதித்துள்ள 5 சதவீதம் முதல் 18 சதவீத சரக்கு, சேவை வரி உயர்வை முழுவதும் ரத்து செய்ய வேண்டும். 80 சதவீதத்துக்கு மேல் ஊனமுற்ற அனைவருக்கும், குறிப்பாக பார்வையற்றோர், வாய் பேசாத, காது கேளாதோருக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்க வேண்டும். அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் நிபந்தனைகள் ஏதுமில்லாமல் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.