நெல்லை மாவட்டத்தில், இன்று அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

Update: 2017-06-15 20:00 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. நெல்லை தாலுகாவில் சீதபற்பநல்லூர், சிறுக்கன்குறிச்சி, பாளையங்கோட்டை தாலுகாவில் கொங்கந்தான்பாறை, புதுக்குளம், மானூர் தாலுகாவில் எட்டான்குளம் ஆகிய ஊர்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடக்கிறது. ராதாபுரம் தாலுகாவில் தெற்கு வள்ளியூர் பகுதி–1, பகுதி–2, அம்பை தாலுகாவில் பிரம்மதேசம், நாங்குநேரி தாலுகாவில் விஜயநாராயணம் பகுதி–1, சேரன்மாதேவி தாலுகாவில் வடக்கு அரியநாயகிபுரம், அரசன்குளம், சங்கரன்கோவில் தாலுகாவில் வன்னிகோனேந்தல், திருவேங்கடம் தாலுகாவில் நாலந்துலா, தென்காசி தாலுகாவில் குலசேகரப்பட்டி ஆகிய ஊர்களில் முகாம்கள் நடைபெறுகின்றன.

செங்கோட்டை தாலுகாவில் கணக்கப்பிள்ளைவலசை, வீரகேரளம்புதூர் தாலுகாவில் அச்சங்குட்டம், ஆலங்குளம் தாலுகாவில் கீழப்பாவூர் பகுதி –1, சிவகிரி தாலுகாவில் சுப்பிரமணியபுரம், கடையநல்லூர் தாலுகாவில் கொடிக்குறிச்சி ஆகிய ஊர்களில் முகாம்கள் நடக்கின்றன. முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து பயன் அடையலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்