நடிகர் விவேக்கின் கிரீன் கலாம் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

நடிகர் விவேக் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவாக கிரீன் கலாம் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி அதன் நிறுவனராக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கிரீன் கலாம் அமைப்பின் சார்பில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மரக்கன்றுகள் நடுதல் மற்ற

Update: 2017-06-14 22:15 GMT

மாமல்லபுரம்,

நடிகர் விவேக் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவாக கிரீன் கலாம் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி அதன் நிறுவனராக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கிரீன் கலாம் அமைப்பின் சார்பில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. நிகழச்சிக்கு டாக்டர் ஜானகிராமன், முல்லைவனம், கிருஷ்ணமூர்த்தி, சதீஷ், சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிரீன் கலாம் அமைப்பின் தலைவர் நடிகர் விவேக் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தனியார் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். அதை தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் 250 மரக்கன்றுகளை நட்டார். பின்னர் மாணவ–மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களையும் அவர் வழங்கினார்.

இந்த நிகழச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ஜனார்த்தனம், மாமல்லபுரம் தமிழ் சங்க ஆலோசகர் ஏ.எச்.அப்துல் அமீது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்