நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,
பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச சம்பளம், வீட்டு வாடகை, வாரவிடுப்பு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும், கோழிக்கோட்டில் பி.எம்.எஸ். அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு பாரதீய டெலிகாம் மஸ்தூர் சங்க மாநில தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். பாரதீய டெலிகாம் ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் ஜோதிநாத் முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் தாணுமூர்த்தி, குமாரதாஸ், வினோத்குமார், அய்யப்பன், ராபி உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முடிவில் சிவலிங்கம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.