கோரிக்கைகளை வலியுறுத்தி கால்நடை மருத்துவர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை மருத்துவர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவமனை முன்பு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கம் மற்றும் உதவி மருத்துவர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தினேஷ், இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில், கால்நடை பராமரிப்புத்துறையில் தற்போது பணியாற்றி வரும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பதவி உயர்வுக்கான ஆணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
கோஷங்கள்
கால்நடை மருத்துவ துறையில் உள்ள துணை இயக்குனர்களுக்கும், முதன்மை கால்நடை மருத்துவர்களுக்கும் பணி நியமனங்கள் வழங்கிய நிலையில் ஊதியம் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கால்நடை மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.