குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க ரூ.10½ லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி
திருவாரூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க ரூ.10½ லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு மக்களை பாதிக்காத வகையில் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு சபாபதி முதலியார் தெருவில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ்் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க தேவையான இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட சபாபதி முதலியார் தெரு, மருதப்பட்டிணம் சாலை, மேட்டுப்பாளையம், குறிஞ்சி நகர், வடக்கு கொத்த தெரு, திருமஞ்சனவீதி ஆகிய 6 இடங்களில் தலா ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் பயன் அடைவார்கள்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தியாகராஜன், நகராட்சி ஆணையர் காந்திராஜ், நகராட்சி பொறியாளர் பாலகங்காதரன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.