தமிழகத்தில் வருங்கால சந்ததியினர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்
தமிழகத்தில் வருங்கால சந்ததியினர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று, மத்திய பிரதேச மாநில மந்திரி உமாசங்கர்குப்தா கூறினார்.
அய்யம்பேட்டை,
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள பசுபதிகோவிலில் பா.ஜனதா கட்சி கிளை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் வாசுதேவன், பூண்டி வெங்கடேசன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய பிரதேச மாநில வருவாய் துறை மந்திரி உமாசங்கர்குப்தா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் போதிய வளர்ச்சி இல்லாமல் பின்தங்கிய நிலையில் உள்ளது. மத்திய அரசு ஏழை மக்களின் நலனுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்களை சென்றடைய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ-மாணவிகள் இந்தி கற்பதில் தவறு இல்லை. தமிழகத்தில் வருங்கால சந்ததியினர் இந்தியாவின் தொடர்பு மொழியான இந்தியை கற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தூய்மை இந்தியா திட்டம்
முன்னதாக பசுபதிகோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய பிரதேச மாநில மந்திரி உமாசங்கர்குப்தா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பா.ஜனதா கோட்ட பொறுப்பாளர் அய்யாரப்பன், கோட்ட துணை பொறுப்பாளர் கண்ணன், அமைப்பு சாரா பிரிவு மாவட்ட துணை தலைவர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அய்யம்பேட்டை நகர தலைவர் ஹரிராஜன் நன்றி கூறினார்.