மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல்
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 282 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றது. சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் நடைபெற்றது குறித்து பேச நேரம் ஒதுக்க சபாநாயகரிடம் கேட்டார். அதற்கு சபாநாயகர் மறுத்து, மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை கைது செய்தனர். இதனை கண்டித்து தி.மு.க. நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் நாகை புதிய பஸ் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 62 பேரை கைது செய்தனர். இதில் மாவட்ட துணை தலைவர் மனோகரன் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
சாலை மறியல்
அதேபோல் வேளாங்க ண்ணி பஸ் நிலையத்தில் கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வாஎடிசன் தலைமையில் தி.மு.க.வி.னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் ஞானசேகரன், இல.பழனியப்பன், ராமஇளம்வழுதி, பொதுக்குழு உறுப்பினர் சுதர்சன், ஒன்றிய துணை செயலாளர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை வேளாங் கண்ணி போலீசார் கைது செய்தனர்.
திட்டச்சேரி பஸ்நிலையம் அருகே பேரூர் தி.மு.க. சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் பேரூர் கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சாலைமறியலில் ஈடுபட்ட 40 பேரை திட்டச்சேரி போலீசார் கைது செய்தனர். கீழ்வேளூர் கடைத்தெருவில் ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 100 பேரை கீழ்வேளூர் போலீசார் கைது செய்தனர். தலைஞாயிறு கடைத்தெருவில் ஒன்றிய செயலாளர் மகாகுமார் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், பேரூர் கழக செயலாளர் சுப்பிரமணியன் உள்பட 30 பேரை தலைஞாயிறு போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மொத்தம் 282 பேர் கைது செய்யப்பட்டனர்.