மு.க.ஸ்டாலின் கைதுக்கு கண்டனம்: தி.மு.க.வினர் சாலை மறியல்; 170 பேர் கைது

மதுரையில் தி.மு.க.வினர் சாலை மறியல்; 170 பேர் கைது, மு.க.ஸ்டாலின் கைதுக்கு கண்டனம்;

Update: 2017-06-14 22:00 GMT

மதுரை,

சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்களை கைது செய்தனர்.

இதை கண்டித்து, தி.மு.க. மதுரை மாநகர் வடக்கு, தெற்கு மாவட்டங்களின் சார்பில் பெரியார் பஸ் நிலையம் அருகே நேற்று மதியம் சாலை மறியல் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் பொன்.முத்துராமலிங்கம், தமிழரசி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 170 பேரை போலீசார் கைதுசெய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்