மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க.வினர் மறியல்
சென்னையில் சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டதை கண்டித்தும், அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ராமநாதபுரம் மற்றும் ராமேசுவரத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கூவத்தூரில் கோடிக்கணக்கில் பணம்-தங்கம் வழங்கப்பட்டதாக பரபரப்பு வீடியோ வெளியானது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கைது செய்யப்பட்டனர்.
இதனைக் கண்டித்து ராமேசுவரத்தில் தி.மு.க. நகரச் செயலாளர் நாசர் கான், அவைத் தலைவர் சண்முகம், மாவட்ட அமைப்பாளர் வில்லாயுதம், முன்னாள் கவுன்சிலர் நம்புசுந்தரம், பாண்டியன் உள்பட 31 பேர் ராமதீர்த்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர். இதேபோல பாம்பனில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரும் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்
இதே போல் ராமநாதபுரத்தில் நகர் தி.மு.க. சார்பில் நகர செயலாளர் கார்மேகம் தலைமையில் அரண்மனை பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பஜார் போலீசார் மறியலில் ஈடுபட்ட 39 பேரை கைது செய்தனர்.
முதுகுளத்தூரில் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் சுப.திவாகரன் தலைமையில் முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், கிழக்கு ஒன்றிய செயலாளர் பூபதி மணி ஆகியோர் முன்னிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆறுமுகவேல், கடலாடி ஒன்றிய செயலாளர் ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் குருசாமி உள்பட 60 பேரை முதுகுளத்தூர் போலீசார் கைதுசெய்தனர்.
சாயல்குடி மும்முனை சந்திப்பில் சாயல்குடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், நகர் செயலாளர் வெங்கடேஷ்ராஜ் ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேரை சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கைது செய்தார்.