ரே‌ஷன் கடைகளில் எடையாளர்கள் நியமிக்க வேண்டும் கூட்டுறவு ஊழியர் சங்கம் கோரிக்கை

ரே‌ஷன்கடைகளில் எடையாளர்களை நியமிக்க வேண்டும் என்று கூட்டுரவு ஊழியர்சங்க மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-06-14 21:45 GMT

விருதுநகர்,

கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட குழு கூட்டம் விருதுநகரில் மாவட்ட தலைவர் அசோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் மகேஸ்வரி, விஸ்வரூப கேசவன், முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொதுவினி யோக திட்டத்தை பாதுகாப்போம் என்பது தொடர்பான பிரசாரத்தை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எடையாளர்

காலி சாக்கு விற்பனையில் பாதிக்கப்பட்டுள்ள பாட்டகுளம், இ.ராமலிங்காபுரம், பி.ராமச்சந்திராபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ரே‌ஷன் கடைகளுக்கு பொருடகள் சப்ளை செய்யும்போது நகர்வு அட்டவணை முறையாக இல்லை. அதனை தெளிவாக்கி தட்டுப்பாடின்றி பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும்.

ஊழியர்களுக்கு வங்கி கணக்கு மூலம் மாதாமாதம் முறையான சம்பளம் வழங்க வேண்டும். ரே‌ஷன் கடைகளுக்கு எடையாளர் நியமிக்க வேண்டும்.பாக்கெட் முறையில் பொருட்களை வினியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வீட்டுவசதி கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்