ராஜபாளையத்தில் சேலையில் தீப்பிடித்து பெண் சாவு

ராஜபாளையம் லட்சுமியாபுரம் தெருவை சேர்ந்த காளீஸ்வரன் என்பவரது மனைவி முக்தீஸ்வரி(வயது30).

Update: 2017-06-14 21:01 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் லட்சுமியாபுரம் தெருவை சேர்ந்த காளீஸ்வரன் என்பவரது மனைவி முக்தீஸ்வரி(வயது30). இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்து உடல் கருகினார். ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்து போனார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முக்தீஸ்வரிக்கு ஒரு மகனும் 2 மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்