வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடந்தது

வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடந்தது.

Update: 2017-06-13 23:23 GMT
தர்மபுரி மாவட்டம் வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜானா (கிராமின்) திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். திட்ட இயக்குனர் காளிதாசன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு 2011-ல் விடுபட்டவர்களில் தகுதியானவர்களுக்கு வீடுகளை வழங்கவும், மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமின்) திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்க தேர்வு செய்வதற்கும் இந்த சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது.

விரைவில் வழங்க நடவடிக்கை

2016-17-ம் நிதியாண்டில் வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் 73 பயனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தனிநபர் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த பணிக்கு மேலும் ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது மேலும் 53 மனுக்கள் பெறப்பட்டு தகுதியுடைய மனுக்களை பரிசீலனை செய்து விரைவில் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி, ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் கதிர்வேல், தாசில்தார் ஜெயலட்சுமி உள்பட அதிகாரிகள், கிராமமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்