நாமக்கல் அருகே கார்கள் மோதியதில் 3 பேர் பலி 3 பேர் படுகாயம்
நாமக்கல் அருகே கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
மோகனூர்,
நாமக்கல் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் உமாபதி (வயது 32), வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (33), நாமக்கல் பகுதியில் ஒரு தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். திருமணம் ஆகாதவர்.
இவர்களும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஞானபிரகாசம் என்பவரும் நேற்று மாலை காரில் சென்று மோகனூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் இரவு 7 மணியளவில் அவர்கள் காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை உமாபதி ஓட்டி வந்தார். அணியாபுரம் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது இவர்களது காரும், நாமக்கல்லில் இருந்து மோகனூர் நோக்கி வந்த ஒரு காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
3 பேர் சாவு
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த உமாபதி, ஜெயச்சந்திரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதேபோல் மற்றொரு காரில் வந்த மோகனூரை சேர்ந்த கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் சுப்பிரமணியன் (68) என்பவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்தில் உமாபதியின் காரில் வந்த ஞானபிரகாசம், நாமக்கல்லில் இருந்து மோகனூரை நோக்கி சென்ற மோகனூர் அருகே ஒருவந்தூர் பகுதியை சேர்ந்த நிதி நிறுவன அதிபரான இன்னொரு சுப்பிரமணியன் (70), ரகுபதி லோகேஸ்வரன் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் நாமக்கல்லில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சூப்பிரண்டு விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், மோகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த விபத்து குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.