குடிநீர் வினியோகத்தை சீரமைக்க கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த பெண்கள் குடிநீர் வினியோகத்தை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த பெண்கள் சீரான குடிநீர் வினியோகிக்க கோரி காலி குடங்களுடன் வந்து நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்காமல் ஊழியர்கள் அலட்சியமாக நடந்து கொளவதாகவும் குடிநீர் குழாய்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினர். நகராட்சி அலுவலகத்தில் மனுவும் கொடுத்தனர்.