உத்தர பிரதேசத்தில் கொலையான ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெற்றோர், சித்தராமையாவுடன் சந்திப்பு

கர்நாடகத்தில் உணவு மற்றும் பொதுவினியோகத்துறை கமி‌ஷனராக பணியாற்றி வந்தவர் அனுராக் திவாரி. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கடந்த மாதம் உத்தர பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

Update: 2017-06-13 22:07 GMT

பெங்களூரு,

இதுபற்றி உத்தர பிரதேச போலீசாரின் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நேற்று அனுராக் திவாரியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் முதல்–மந்திரி சித்தராமையாவை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, தங்களது மகன் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் எங்களுக்கு நியாயம் கிடைக்க உதவி செய்ய வேண்டும் எனவும் அனுராக் திவாரியின் பெற்றோர், சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்