மழை காரணமாக தேயிலை தோட்டத்தில் மண்ணை பதப்படுத்தி பராமரிப்பு விவசாயிகள் தீவிரம்

மழை காரணமாக தேயிலை தோட்டத்தில் மண்ணை பதப்படுத்தி பராமரிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Update: 2017-06-13 21:57 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தேயிலை தொழிலையே பெரிதும் நம்பி உள்ளனர். பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன. தற்போது பசுந்தேயிலை வரத்து அதிகமாக உள்ளதால் தேயிலை வாரியம் மாதந்தோறும் நிர்ணயிக்கும் குறைந்த பட்ச கொள்முதல் விலையைக் கூட தேயிலை தொழிற்சாலைகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த பல மாதங்களாக வறட்சியால் தேயிலை தோட்டங்களில் உள்ள மண் இறுகி காணப்பட்டது. தற்போது அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு

இதனால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் உள்ள தேயிலை செடிகளுக்கு மேல் கவாத்து செய்து வருகின்றனர். இத்துடன் தோட்டத்தில் வளர்ந்துள்ள களைகளை நீக்கி, வேர்கள் இலகுவாக மண்ணுக்குள் சென்று தண்ணீரை உறிஞ்சுவதற்காக டாலமைட் எனப்படும் ரசாயன பவுடரை வீச்சு முறையில் கையால் இட்டு வருகின்றனர். இந்த டாலமைட் ரசாயன பவுடர் மண்ணின் இறுக்கத்தைக் போக்க மண் இலகுவாக மாறுவதற்கு உதவும். இவ்வாறு மண்ணை பதப்படுத்தி பராமரிப்பதால், தேயிலை செடிகளின் வேர்கள் தடையின்றி மண்ணுக்குள் சென்று செடி செழிப்பாக வளரும். இதன் மூலம் பசுந்தேயிலை உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். இதற்கான பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

மேலும் செய்திகள்