பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்,
இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் தீத்தான் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் பிரபாகரன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விபத்தில் மரணம் அடைந்த தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் மணல் தட்டுப்பாட்டை போக்குவதற்கு மாவட்டந்தோறும் கிட்டங்கி அமைத்து மணல் வினியோகம் செய்ய வேண்டும். மேலும் பத்திரப்பதிவு முறையில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.