இருதரப்பினர் இடையே மோதல்; 4 பேர் காயம் 3 பேர் கைது

கூத்தாநல்லூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

Update: 2017-06-13 22:30 GMT
கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓகைபேரையூர், மேலத்தெருவை சேர்ந்தவர் சிவதாஸ். இவருடைய மகன் மாதவன் (வயது 28). அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் பாலசந்தர் (32). இவர் சம்பவத்தன்று மாதவன் வீட்டின் வாசல் படியில் பாட்டில்களை உடைத்து போட்டுள்ளார். இதனை மாதவன் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மாதவன் தரப்பை சேர்ந்த சுரேஷ், கண்ணுசாமி, நந்தகுமார், கோவிந்தசாமி ஆகியோருக்கும், பாலசந்தர் தரப்பை சேர்ந்த ஸ்ரீதர், தினேஷ், மாதவன், அரவிந்த் ஆகி யோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

4 பேர் காயம்

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் மாதவன், ஸ்ரீதர், சுரேஷ், பாலசந்தர் ஆகிய 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மாதவன் மற்றும் பாலசந்தர் தனித்தனியே அளித்த புகாரின் பேரில் கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவதாஸ், நந்தகுமார், கோவிந்தசாமி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக 9 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்