சீர்காழியில் ஜமாபந்தி நிகழ்ச்சி உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது

சீர்காழியில் மயிலாடுதுறை உதவி கலெக்டர் சந்திரன் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2017-06-13 22:30 GMT
சீர்காழி,

சீர்காழி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை உதவி கலெக்டர் சந்திரன் தலைமை தாங்கினார். தனி தாசில்தார்கள் தேவகி, ராணி, பெருமாள், மண்டல துணை தாசில்தார் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் பிரேமசந்திரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பன்னங்குடி, மாதானம், அகரவட்டாரம், பழையபாளையம், நல்லவிநாயகபுரம், புதுப்பட்டினம், தாண்டவன்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு வேண்டுதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல்-நீக்குதல், திருமண உதவித்தொகை, மாற்று திறனாளி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வருமானம்-சாதி சான்றிதழ் கோருதல், விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை உதவி கலெக்டர் பெற்று கொண்டார்.

23-ந் தேதி

அப்போது உதவி கலெக்டர் கூறுகையில், வருகிற 23-ந் தேதி வரை நடைபெற உள்ள ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்றார். இதில் துணை தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்