குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்திய கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்திய கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.;
தஞ்சாவூர்,
கும்பகோணத்தில் தொழிலாளர் நலத்துறையினர் ஆய்வு மேற்கொண்டபோது 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளரை வேலைக்கு அமர்த்தியதாக கடை உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை கும்பகோணம் தலைமை நீதித்துறை நடுவர் விசாரித்து குழந்தை தொழிலாளரை வேலைக்கு அமர்த்திய கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்தார். கடந்த சில நாட்களில் தஞ்சை மாவட்டத்தில் 14 வயதிற்குட்பட்ட 12 குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக 12 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, கும்பகோணம் குற்றவியல் நடுவர் மன்றத்தால் இதுவரை ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிறை தண்டனை
எனவே அனைத்து வணிக நிறுவனங்களும் 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக 18 வயதிற்குட்பட்டவர்களை எந்தவொரு அபாயகரமான தொழில்களிலும் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். 1986-ம் ஆண்டு குழந்தை மற்றும் வளரிளம் தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி அவ்வாறு பணியில் அமர்த்தினால் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. தஞ்சை மாவட்டம் குழந்தை தொழிலாளர் இல்லாத ஒரு மாவட்டமாக திகழ்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.