கணவன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை
கும்பகோணம் அருகே கணவன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.;
பட்டீஸ்வரம்,
கும்பகோணம் அருகே உள்ள கீழபழையாறு சிவன் கோவி்ல் தெருவை சேர்ந்தவர் முருகேசன். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்தார். இவருடைய மனைவி வினோதினி (வயது27). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் கணவன் இறந்த துக்கத்தில் மனம் உடைந்து காணப்பட்ட வினோதினி சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வினோதினி இறந்தார்.
வழக்குப்பதிவு
இது குறித்து வினோதினியின் உறவினர் உதயகுமார் கொடுத்த புகாரின்பேரில் பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்த சம்பவம் பட்டீஸ்வரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.