கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை படிக்க ஆர்வம் இல்லாததால் விபரீத முடிவு

பள்ளியாடியில் படிக்க ஆர்வம் இல்லாததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-06-13 23:15 GMT
தக்கலை,

தக்கலை போலீஸ் சரகத்திற்கு உள்பட்ட பள்ளியாடியை சேர்ந்தவர் வேலாயுதன். ஓய்வு பெற்ற தபால் ஊழியர். இவரது மகன் ஆதர்ஸ் (வயது 17). நாகர்கோவிலில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்து கல்லூரிக்கு புத்தகங்கள் வாங்குவதற்காக சென்றார். புத்தகங்கள் வாங்கிய பின்பு மாலையில் வீடு திரும்பினார். இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

தூக்கில் தொங்கினார்

மறுநாள் காலையில் ஆதர்ஸ் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து பெற்றோர் அறையில் சென்று பார்த்த போது, அங்கு ஆதர்ஸ் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த அவரது தாயார் கதறி அழுதார். அவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆதர்ஸ் படிக்க ஆர்வம் இல்லாததால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்