தென்காசி அருகே தி.மு.க சார்பில் ஊரணியில் தூர்வாரும் பணி

மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் இந்த ஊரணியை தூர்வாரும் பணி நேற்று காலை தொடங்கியது.

Update: 2017-06-13 20:30 GMT
தென்காசி,

தென்காசி அருகே குத்துக்கல்வலசையில் ஊத்துக்கரை என்ற ஊரணி உள்ளது. தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் இந்த ஊரணியை தூர்வாரும் பணி நேற்று காலை தொடங்கியது. மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் இதை தொடங்கி வைத்தார்.

முன்னதாக, குத்துக்கல்வலசையில் அவர் தி.மு.க கொடியேற்றி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் பெண்களுக்கு இலவச சேலைகளும், பள்ளி மாணவ–மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.ரசாக், மாவட்ட பொருளாளர் சேக் தாவூது, மாவட்ட விவசாய தொழிலாளர்கள் அணி அமைப்பாளர் கோமதிநாயகம், தொண்டர் அணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் சேக் அப்துல்லா, முருகேசன், ஒன்றிய செயலாளர் ராமையா, நகர செயலாளர் சாதிர், முன்னாள் நகரசபை தலைவர் ரஹிம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் வளனரசு, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அழகு சுந்தரம், மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்