59 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா

நெல்லை மாவட்டத்தில் 59 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

Update: 2017-06-12 23:58 GMT

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் 59 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

வீட்டுமனை பட்டா

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

தமிழக முதல்–அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து சங்கரன்கோவில் தாலுகா வடக்குபுதூர் கிராமத்தில் விபத்தில் மரணம் அடைந்த பெருமாள் வாரிசுதாரர் முத்துலட்சுமிக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

மேலும் சங்கரன்கோவில் தாலுகா குவளைக்கண்ணி கிராமத்தை சேர்ந்த 16 பேர், நெல்லை அருகே உள்ள மேலத்திடியூர் கிராமத்தை சேர்ந்த 35 பேர், மானூர் தாலுகா மதவக்குறிச்சி கிராமத்தை சார்ந்த 8 பேர் என மொத்தம் 59 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.

முதியோர் உதவித்தொகை

பாளையங்கோட்டையை சேர்ந்த ஒருவருக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையையும், திருச்சியில் மாநில அளவில் நடைபெற்ற அரசு ஊழியர்களுக்கான கபடி போட்டியில் 2–வது இடத்தை பிடித்த நெல்லை மாவட்ட அரசு ஊழியர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் (தனி) விஜயலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நிர்மலா, பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம், மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதிசற்குணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்