குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
பெரம்பலூர்,
குழந்தை தொழிலாளர்களே இல்லை என்ற நிலையினை உருவாக்கிடும் விதமாக ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறையினர் சார்பில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றனர். அதனை தொடர்ந்து குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் கையெழுத்திட்டு, கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து குழந்தைத்தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடும் விதமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகள் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் நகரை வலம் வந்தனர். பாலக்கரையில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலமானது புதிய பஸ் நிலையத்திற்கு சென்று மீண்டும் பாலக்கரையை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) மனோகரன், தொழிலாளர் ஆய்வாளர் பாலதண்டாயுதபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்திலும்...
அரியலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர் அண்ணா சிலையிலிருந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளர் துறை சார்பில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன் தலைமையில் நேற்று நடந்தது. இதனைத்தொடர்ந்து, சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளர் துறை சார்பில் பஸ் நிலையத்திலுள்ள பஸ்களில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு முறை ஸ்டிக்கர்களை ஒட்டியும், பேருந்து நிலையங்களில் உள்ள டீக்கடைகளில் துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன் வழங்கினார்.
இதில் முதன்மைக்கல்வி அலுவலர் ஒளி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முகமது யூனுஸ்கான், தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் வெங்கடேசன், பாதுகாப்பு அலுவலர் செல்வராசு, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், இளைஞர் நீதிக் குழும உறுப்பினர் மற்றும் குழந்தைகள் இலவச உதவி மையம் 1098 உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.