ஆழ்துளை கிணறு அமைத்து தரக்கோரி பெண்கள் கலெக்டரிடம் மனு

சித்தூரில் ஆழ்துளை கிணறு அமைத்து தரக்கோரி புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கணேஷிடம் பெண்கள் மனு கொடுத்தனர்.

Update: 2017-06-12 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

கலங்கிய தண்ணீர்

கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டம் சித்தூர் பகுதியை சேர்ந்த பெண்கள் அந்த பகுதியில் உள்ள குடிநீர் ஊரணியில் உள்ள கலங்கிய தண்ணீரை பாட்டிலில் எடுத்து வந்து மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் குடிநீர் ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் இருந்து தண்ணீரை எடுத்து இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது குடிநீர் ஊரணியில் உள்ள தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக இல்லாமல் கலங்கி போய்விட்டது. இதனால் அந்த தண்ணீரை எங்களால் பயன்படுத்த முடியவில்லை.

கலெக்டர் நடவடிக்கை

இதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊரணியை தூர்வாரி, சுத்தப்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் குடிநீர் ஊரணியில் உள்ள தண்ணீர் பயன் படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால், அந்த பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து எங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். தற்போது கடுமையான வறட்சி நிலவுவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். எனவே உடனடியாக இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்