ரூ.1.68 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் துணை சபாநாயகர் தம்பிதுரை வழங்கினார்
அஞ்செட்டியில் 499 பேருக்கு ரூ.1 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 556 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் தம்பிதுரை வழங்கினார்.;
தேன்கனிக்கோட்டை,
தேன்கனிக்கோட்டை பேரூராட்சி, கெலமங்கலம் மற்றும் தளி ஊராட்சிகளில் வறட்சி காரணமாக மேற்கொள்ளப்பட்டு உள்ள குடிநீர் திட்டப்பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆய்வு செய்தார். அப்போது தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, கலெக்டர் கதிரவன், சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாமை துணை சபாநாயகர் தம்பிதுரை தொடங்கி வைத்தார். மேலும் அஞ்செட்டி பஸ் நிலையம் அருகில் ரூ.13.20 லட்சம் மதிப்பில் புதிய சுகாதார வளாக கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் 499 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 556 மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதாவது:-
விமான போக்குவரத்து
தளி வட்டாரத்தை 2 ஆக பிரித்து அஞ்செட்டியில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சிறிய பஸ்களை இயக்கவும், கூடுதலாக உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தவும், மலைவாழ் பகுதி மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் அரசு பெண்கள் கல்லூரி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது ஓசூரில் இருந்து விமான போக்குவரத்து சேவைக்கு ஒப்பந்தம் கையெழுத்து ஆகி உள்ளது. விமான சேவை தொடங்கும் போது இந்த பகுதி மேலும் வளர்ச்சி பெறும். குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க உயர்மட்ட தொட்டிகள் கட்டப்பட்டு தடையில்லாமல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதி திராவிட மக்களுக்கு பட்டா வழங்கப்படும். தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்த தகவலால் தமிழக அரசு வழங்கும் விலையில்லாத தரமான அரிசியை வாங்க பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அ.தி.மு.க. (அம்மா) செயலாளர் கோவிந்தராஜ், ஆவின் தலைவர் தென்னரசு, கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாராயணன், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சாம் கிங்ஸ்டன், தளி வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணபவா, முன்னாள் பேரூராட்சி தலைவர் நாகேஷ், முன்னாள் துணை தலைவர் ராமன், அஞ்செட்டி அ.தி.மு.க. (அம்மா) செயலாளர் ஜாகீர்உசேன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மாதேவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.