குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு கலெக்டர் தலைமையில் நடந்தது
தர்மபுரியில் கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தர்மபுரி,
தமிழகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது கலெக்டர் கூறுகையில், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை சார்பாக ஆண்டுதோறும் உயர்கல்வி படிக்கும் திட்டத்தின் கீழ் முன்னாள் குழந்தை தொழிலாளர் மாணவர்களுக்கு அவர்களின் படிப்பு காலம் முடியும் வரை ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு 8 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.48 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
பாராட்டு சான்றிதழ்
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குழந்தை தொழிலாளர் மாணவர்களில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 6 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுதொகையை கலெக்டர் விவேகானந்தன் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குப்புசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர் பாஷா, முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசன், தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் கோட்டீஸ்வரி, திட்ட மேலாளர் சரவணன், தாசில்தார் ஜெயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.