மராட்டியத்தில் பருவமழை தொடங்கியது

மராட்டியத்தில் பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Update: 2017-06-12 20:58 GMT

மும்பை,

மராட்டியத்தில் பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

வெயிலுக்கு விடைகொடுத்த மழை

மராட்டியத்தில் வறுத்தெடுத்த கோடை வெயிலுக்கு விடைகொடுத்து, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் மாநில தலைநகர் மும்பையில் பரவலாக நல்ல மழை பெய்தது. இரவும் மும்பை மற்றும் தானே, நவிமும்பை உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கி நின்றது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், தாராவி தோபிகாட் பகுதியில் உள்ள குடிசை வீடுகளிலும் மழைநீர் புகுந்தது.

பருவமழை தொடங்கியது

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சாந்தாகுருசில் 70 மி.மீட்டரும், கொலபாவில் 94 மி.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

இந்தநிலையில், மராட்டியத்தில் பருவமழை பெய்ய தொடங்கி விட்டதாக மும்பை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மும்பையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது.

பருவமழை பெய்ய ஆரம்பித்து உள்ளதை அடுத்து மும்பைவாசிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்