உங்கள் வங்கி கணக்கில் பணம் பத்திரமாக இருக்கிறதா? ஆதார் எண்ணை கேட்டு நடக்கும் நூதன மோசடி
வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்ய ஆதார் எண் மூலம் தற்போது நூதன முறையில் மோசடி நடந்து வருகிறது. எனவே பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.;
கோவை,
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் அதிகரிக்கத்தான் செய்வார்கள். அதிலும் கொஞ்சம் கவனம் இல்லை என்றால் முற்றிலும் ஏமாற்றி விடுவார்கள். ஈமுகோழி மோசடி, ரியல் எஸ்டேட் நடத்தி மோசடி, சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி, பரிசு விழுந்துள்ளதாக கூறி தபால் மூலம் பொருட்களை அனுப்பி வைத்து மோசடி என்று மோசடி செய்யும் முறை நீண்டு கொண்டே போகிறது.
கடந்த சில மாதங்களாக வங்கியில் இருந்து பேசுகிறோம்... உங்கள் ஏ.டி.எம். கார்டு ரகசிய எண்ணை மாற்றுங்கள் என்று கூறி மோசடி நடந்து வந்தது. தற்போது ஆதார் எண்ணை வைத்து நூதன முறையில் மோசடி செய்யும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
ஆதார் எண்
ஆதார் எண் எதிர்காலத்தில் அரசுக்கும் மனிதனுக்கும் பாலமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேக மும் இல்லை. தனி மனிதனுக்கு அரசிடம் இருந்து கிடைக்கும் சலுகைகள் பெற இந்த எண் கட்டாயம் தேவை. தற்போது மானிய விலையிலான கியாஸ் சிலிண்டரை நாம் வாங்கும்போது அதற்கான மானியம் நமது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கும் ஆதார் எண் அவசியம்.
அதுபோன்று ஆதார் எண் இல்லை என்றால் வங்கி கணக்கு தொடங்க முடியாது. ஏற்கனவே வங்கி கணக்கு வைத்து இருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை வங்கியில் சமர்ப்பித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது நூதன முறையில் மோசடி நடந்து வருகிறது. வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மோசடி செய்து வந்தவர்கள், தற்போது நூதன முறைக்கு மாறி உள்ளனர்.
ரகசிய எண்
அதாவது, செல்போனுக்கு தொடர்பு கொள்ளும் மர்ம ஆசாமிகள், நாங்கள் ஆதார் கார்டு நிறுவனத் தில் இருந்து பேசுகிறோம், உங்களுக்கு ஆதார் கார்டு வந்துவிட்டதா? என்று கேட்பார்கள். அதற்கு நாம் வந்துவிட்டது என்று கூறினால், உங்கள் எண்ணை நாங்கள் பதிவு செய்ய வேண்டும் என்பதால் உங்கள் செல்போனில் ஒன்றை அழுத்தி, ஆதார் எண்ணை பதிவு செய்யுங்கள் என்று கூறுவார்கள்.
உடனே எதுவுமே தெரியாமல் நாமும், ஆதார் எண்ணை பதிவு செய்வோம். பின்னர் உங்கள் செல்போனுக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணை (ஓ.டி.பி.) கூறுங்கள் என்று சொல்வார்கள். உடனே நாமும் அதை சொல்லுவோம்.
ஏமாறக்கூடாது
ரகசிய எண்ணை கூறிய சில நொடிகளில் நமது வங்கி கணக்கில் இருக்கும் பணம் அனைத்தும் எடுக்கப்பட்டு விடும். அதன் பின்னர்தான் நாம் ஏமாற்றப்பட்டது தெரியவரும். எனவே செல்போனுக்கு யாரும் தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை கூறுங்கள் என்று கேட்டால் கொடுத்துவிட்டு ஏமாந்துபோகக்கூடாது.
மோசடி பேர்வழிகளிடம் ஆதார் எண் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணை கூறியதும் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எப்படி எடுக்க முடியும் என்பது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கண்டுபிடிக்க முடியும்
வங்கி கணக்கில் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டியது கட்டாயமாகி விட்டதால், ஆதார் எண்ணை வைத்து ஒருவரின் வங்கி கணக்கு எண், அவரது கணக்கில் இருக்கும் தொகை, மற்றும் அவர் செய்யும் வங்கி பரிவர்த்தனை ஆகியவற்றை மிகத்தெளிவாக கண்டுபிடிக்க முடியும். இதை வைத்து வங்கியில் இருந்து பேசுகிறோம், அல்லது ஆதார் கார்டு நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் என்று கூறி ஆதார் எண்ணை பெற்று அதை அதற்கான எந்திரத்தில் டைப் செய்யும்போது அந்த நபரின் அனைத்து தகவலும் கிடைத்துவிடும்.
அதன் பின்னர் வங்கி கணக்கு எண்ணை தெரிந்து கொண்டு, ஆன்லைன் மூலம் பணத்தை எடுக்க முயற்சி செய்வார்கள். அப்போது ஒருமுறை பயன்படுத்தப்படும் ரகசிய எண் கேட்கும். அந்த எண்ணை யும் நம்மிடம்தான் கேட்பார்கள். நாமும் ஆதார் எண்ணை வங்கியில் சேர்க்கதான் கேட்கிறார்கள் என்று நினைத்து கூறும்போது, அந்த எண் மூலம் நமது வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தையும் எடுத்து விடுவார்கள்.
உஷாராக இருக்க வேண்டும்
மேலும் வங்கியில் ஆதார் எண்ணை பதிவு செய்ய யாரும் போன் செய்து கேட்கமாட்டார்கள். நீங்கள்தான் வங்கிக்கு சென்று பதிவு செய்ய வேண்டும். எனவே யாரும் வங்கியில் இருந்து பேசுகிறோம் என்றுகூறினால் யாரும், ஆதார் எண்ணையோ, அல்லது வங்கி கணக்கு எண்ணையோ, உங்கள் செல்போனுக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தப்படும் ரகசிய எண்ணையோ கூற வேண்டாம். இதில் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும்.தற்போது கோவையில் இது போல மோசடிகள் அரங்கேறி வருகின்றன.நமது தனிப்பட்ட ரகசிய குறியீடுகள் மற்றும் எண்களை தனிப்பட்ட நபர்கள் எந்த விதமான முன்தகவலோ அல்லது அறிமுகமோ இல்லாமல் கேட்டால் அதை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.