வெள்ளாற்றுக்குள் இறங்கி கிராம மக்கள் போராட்டம் வாகனங்கள் சிறைபிடிப்பு; 250 பேர் கைது
ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளாற்றுக்குள் இறங்கி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
ஸ்ரீமுஷ்ணம்,
மேலும் வாகனங்களும் சிறைபிடிக்கப்பட்டது. இந்த போராட்டங்கள் தொடர்பாக 250 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மணல் குவாரி
ஸ்ரீமுஷ்ணம் அருகே மதகளிர்மாணிக்கம், கூடலையாத்தூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களையொட்டி வெள்ளாறு ஓடுகிறது. இந்த இரு கிராமங்களிலும் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதகளிர்மாணிக்கம் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றங்கரையில் மணல் குவாரி அமைப்பதற்காக வருவாய் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது அங்கு திரண்டு வந்த கிராம மக்கள், இங்கு குவாரி அமைத்தால் தங்கள் பகுதியில் நீர்வளம் பாதிக்கப்படும், விவசாயம் கேள்விக்குறியாகி விடும். எனவே மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர்.
இதேபோல் கூடலையாத்தூர் கிராமத்திலும் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் தற்காலிகமாக குவாரி அமைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட்டனர்.
சமாதான கூட்டம்
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் இரு கிராம மக்கள் பங்கேற்ற சமாதான கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மதகளிர்மாணிக்கம் கிராம மக்கள் தங்களது கிராமத்தில் இருந்து ஒரு பிடி மணலை கூட எடுத்து செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துவிட்டு, சென்றுவிட்டனர்.
இதேபோன்று பேச்சுவார்த்தைக்கு வந்த கூடலையாத்தூர் கிராம மக்கள், தங்கள் பகுதியில் மாட்டுவண்டி மணல் குவாரி வேண்டுமென்றால் அமைத்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துவிட்டு சென்றனர்.
திடீரென போலீஸ் குவிப்பு
இந்த நிலையில், நேற்று காலை 6 மணிக்கு மதகளிர்மாணிக்கம் கிராமத்தில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ்தங்கையா தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். திடீரென போலீசார் குவிக்கப்பட்டது, ஏன், எதற்கு என்று தெரியாமல் கிராம மக்கள் திகைத்தனர்.
சிறிது நேரத்தில் கிராமத்திற்குள் லாரிகள் வரிசையாக வந்து, வெள்ளாற்றின் உள்ளே சென்றது. இதன் பின்னர் தான் போலீஸ் பாதுகாப்புடன் மணல் குவாரியை செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து இருப்பது கிராம மக்களுக்கு தெரியவந்தது.
போராட்டம்
இதனால் வெகுண்டெழுந்த கிராம மக்கள், ஒன்று திரண்டு வெள்ளாற்றுக்கு விரைந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றும் பலனளிக்கவில்லை. கிராம மக்கள் அனைவரும் திபு, திபுவென ஆற்றுக்குள் இறங்கினர்.
தொடர்ந்து அங்கு மணல் அள்ளுவதற்காக தயார் நிலையில் நின்றிருந்த பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளை அவர்கள் சிறைபிடித்து போராட்டம் செய்தனர். மேலும் ஆற்றின் உள்ளே அமர்ந்து, மணல் குவாரிக்கு எதிராகவும், அதிகாரிகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்த சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், தாசில்தார்கள் காட்டுமன்னார்கோவில் ஜெயந்தி, ஸ்ரீமுஷ்ணம் உலகளந்தான் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீசார் எச்சரிக்கை
அப்போது போராட்டக்காரர்கள், இங்கிருந்து மணல் எடுக்கக்கூடாது என்று தெரிவித்தும், எங்களது எதிர்ப்பை மீறி எப்படி நீங்கள் மணல் எடுக்கலாம் என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். மேலும் இங்கு நாங்கள் குவாரியை செயல்படுத்த விடமாட்டோம் என்று கூறி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதை யடுத்து போலீசார், அனைவரும் அமைதியாக கலைந்து செல்லாவிட்டால், கைது செய்வோம் என்று போராட்டக்காரர்களை எச்சரித்தனர். ஆனால் அவர்களோ தங்களுக்கு இந்த பிரச்சினையில் நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரையில் ஆற்றில் இருந்து வெளியேற மாட்டோம் என்று தெரிவித்து விட்டனர்.
250 பேர் கைது
இதையடுத்து, வேறு வழியில்லாமல் ஆற்றுக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் 3 வேன்களில் ஏற்றி, ஸ்ரீமுஷ்ணத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
அந்த வேன்கள் மதகளிர்மாணிக்கம் கிராமத்துக்கு உள்ளே வந்த போது, அவற்றை கிராம மக்கள் வழிமறித்து சிறைபிடித்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், அப்போது தான் நாங்கள் கலைந்து செல்வோம் என்று அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.இதையடுத்து, போலீசார் அங்கிருந்து வேன்களை திருப்பி, மாற்று வழியில் செல்ல முடிவு செய்தனர். அவ்வாறு சென்ற போதும், கிராம மக்கள் அந்த வேன்களை கிராமத்தின் அருகே வழிமறித்து சிறைபிடித்தனர். அடுத்தடுத்து கிராம மக்கள் போராட்டம் செய்ததால், போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்.
இறுதியாக வேன்களை வழிமறித்து போராட்டம் செய்த 100 பேரையும் கைது செய்தனர். இதன் மூலமாக மொத்தம் 250 பேர் கைது செய்யப்பட்டு, ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
போலீஸ் பாதுகாப்புடன் மணல் அள்ளும் பணி
இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் மதகளிர்மாணிக்கம் கிராமத்தில் மணல் குவாரியை அதிகாரிகள் செயல்படுத்தினர். அங்கிருந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் லாரிகளில் மணல் அள்ளி அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் போராட்டம் நடைபெறும் என்பதால், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் கரையோர பகுதிகளில் போலீசார் அவ்வப்போது ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.
வல்லியம் கிராமத்திலும் போராட்டம்
இதேபோன்று மதகளிர்மாணிக்கம் கிராமத்தில் வெள்ளாற்றின் மறுகரையாக உள்ள வல்லியம் கிராம மக்களும் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் அந்த வழியாக குவாரிக்கு சென்ற லாரிகளை தடுத்து நிறுத்தும் வகையில், சாலையின் குறுக்கே மரக்கட்டைகளை போட்டு போராட்டம் செய்தனர். பின்னர் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் வல்லியம் கிராமத்திற்கு சென்று அவர்களை கலைந்து போக செய்தனர். தொடர்ந்து அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு மணல் குவாரிக்கு எதிராக அடுத்தடுத்து நடந்த இந்த போராட்டங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.