ஹேக்கர்களை தடுக்கும் உச்சரிப்பு அப்ளிகேசன்

குரல் ஒலியானது வெளியில் ஒரு திசையில் இருந்து வருகிறதா? அல்லது ஹேக்கர்களால் கட்டுப்படுத்தப்பட்டு ஒலிப்பதிவில் இருந்து நகல் எடுத்து ஒலிக்கப்படுகிறதா? என்பதை அறிய முடியும்.

Update: 2017-06-12 08:58 GMT
மது வாய்மொழிக்கேற்ப கட்டுப்படும் எலக்ட்ரானிக் கருவிகள் பயன்பாட்டிற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஹேக்கர்கள் எனும் தகவல் திருடர்களுக்கு இது கொஞ்சம் வசதியாகப் போய் விடும். பதிவு செய்யப்பட்டுள்ள நமது குரலை வைத்து நமது கருவிகளை திறந்து பயன்படுத்த முடியும். 

அமெரிக்காவின் பபலோ பல்கலைகழக ஆய்வாளர்கள், ஹேக்கர்களால் கைப்பற்ற முடியாத வகையில் குரல் பாதுகாப்பு வசதியை மேம்படுத்த முடியுமா? எனும் சோதனைகளை மேற்கொண்டனர். அதன் பலனாக ஒரு புதிய அப்ளிகேசனை உருவாக்கி உள்ளனர். இது அனைத்து போன்களிலும் உள்ள ‘மேக்னட்டோமீட்டர்’ எனும் திசையறி கருவியை பயன்படுத்தி செயல்படுவதாகும்.

புவியின் காந்தப்புலத்தின் அடிப்படையில் நமது முகமும், செல்போனின் முகமும் எந்த திசை நோக்கி இருக்கிறது என்பதை அறிவதற்காக இந்தக் கருவி வழக்கமாக எலக்ட்ரானிக் கருவிகளில் வைக்கப்பட்டிருக்கும். இதன் அடிப்படையில் குரல் ஒலியானது வெளியில் ஒரு திசையில் இருந்து  வருகிறதா? அல்லது ஹேக்கர்களால் கட்டுப்படுத்தப்பட்டு ஒலிப்பதிவில் இருந்து நகல் எடுத்து ஒலிக்கப்படுகிறதா? என்பதை அறிய முடியும். இதனால் ஹேக்கர்களின் தவறான எண்ணம் தடுக்கப்பட்டுவிடும். வெளியில் இருந்து, ஸ்மார்ட்போனின் உரிமையாளர் பேசும் குரலுக்கு மட்டுமே இந்த அப்ளிகேசன் செவிசாய்த்து கருவிகளை திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரும். 

அட்லாண்டா நகரில் நடந்த எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் பொறியாளர்களின் 37–வது சர்வதேச மாநாட்டில், சிறந்த மாணவர் ஆராய்ச்சி கட்டுரை மற்றும் கண்டுபிடிப்புக்கான விருதை இந்த ஹேக்கர் தடுப்பு அப்ளிகேசன் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்