படைவீரர் பணிக்கு ஆள்சேர்ப்பு முகாம்
ராணுவத்தின் சென்னை மண்டல தலைமை அலுவலகம் படைவீரர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ராணுவத்தில் படைவீரர் பணிக்கு ஆள்சேர்ப்பு முகாம் அடுத்த மாதம் திருவண்ணாமலையில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
ராணுவத்தின் சென்னை மண்டல தலைமை அலுவலகம் படைவீரர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, சென்னை, கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சீபுரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம். படைவீரர், டெக்னிக்கல், நர்சிங் உதவியாளர், பொதுப் பணி, கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் போன்ற பிரிவுகளில் இவர் கள் பணி நியமனம் பெறலாம். விண்ணப்பதாரர் இந்திய குடியுரிமை பெற்றவராகவும், திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரராகவும் இருக்க வேண்டும்.
இந்த ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
கல்வித்தகுதி:
பிளஸ்–2 வொக்கேசனல் பாடம் பயின்றவர்கள் படைவீரர் டெக்னிக்கல், கிளார்க், ஸ்டோர்கீப்பர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
8, 10, 12–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. சில பணிகளுக்கு பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி விவரங்களை இணைய தளத்தில் பார்க்கலாம். விளையாட்டில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்திருந்தால் போனஸ் மதிப்பெண்கள் கிடைக்கும்.
வயது வரம்பு:
17½ வயது முதல் 23 வயதுடையவர்களுக்கு பணிகள் உள்ளன. பொதுப் பணி விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட உடல் தகுதி அவசியம்.
தேர்வு செய்யும் முறை:
சான்றிதழ் சரிபார்த்தல், உடல் அளவுத் தேர்வு, உடல்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 3–7–2017–ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பித்து, அனுமதி அட்டை பெற்றவர்கள், 19–7–2017 முதல் 25–7–2017 வரை திருவண்ணாமலையில் நடைபெறும் ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joindindianarmy.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.