தாராபுரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.2 லட்சம்- 5 பவுன் நகை கொள்ளை
தாராபுரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து பட்டப்பகலில் மளிகை கடைக்காரர் வீட்டில் ரூ.2 லட்சம் மற்றும்
தாராபுரம்,
5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மளிகைக்கடை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 54). இவர் தாராபுரம் தினசரி மார்க்கெட்டில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜெயலலிதா (52). இவர்களுடைய மகன் விக்னேஷ். இவர்களுடன் ஜெயலலிதாவின் வயதான தாயாரும் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் விருந்திற்கு வந்த ஜெயலலிதாவின் சகோதரி கலைச்செல்வியும், அவருடைய கணவர் தேவேந்திரனும் கடந்த ஒரு வாரமாக தண்டபாணி வீட்டிலேயே தங்கி உள்ளனர்.
இதற்கிடையில் நேற்று காலை 7.30 மணிக்கு மளிகைக்கடைக்கு சரக்கு வந்திருந்ததால், அதை இறக்கிவைப்பதற்காக தண்டபாணி மளிகைக்கடைக்கு சென்றுவிட்டார். அவரது மகன் விக்னேஷ் அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார்.
அதிகாரிகள் என்று கூறிய ஆசாமிகள்
இதனால் வீட்டில் ஜெயலலிதாவும், அவரது சகோதரி கலைச்செல்வி, சகோதரியின் கணவர் தேவேந்திரன் மற்றும் ஜெயலலிதாவின் தாயார் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது தேவேந்திரன் ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். குளியல் அறைக்கு கலைச்செல்வி சென்று இருந்தார்.
அப்போது வீட்டிற்கு வெளியே திடீரென்று ஒரு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து 3 மர்ம ஆசாமிகள் டிப்-டாப் உடை அணிந்து இறங்கினார்கள். அவர்கள் தங்களது கையில் ஆவணங்கள் வைக்கும் கோப்புகளும், போலீசார் பயன்படுத்தும் கைவிலங்கும் வைத்திருந்தனர். அவர்களை பார்த்ததும் ஜெயலலிதா வீட்டிற்குள் இருந்து வெளியே ஓடிவந்து நீங்கள் யார்? என்று கேட்டுள்ளார்.
அப்போது அந்த ஆசாமிகள் ஜெயலலிதாவிடம் “நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள், உங்கள் கணவர் நடத்தும் மளிகைக்கடை மூலம் வரும் வருமானத்திற்கு முறையாக வருமான வரி செலுத்தவில்லை, என்று புகார் வந்துள்ளது. மேலும் வீட்டில் அனுமதியில்லாமல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதனால் வீட்டை சோதனை செய்ய வந்துள்ளோம்” என்று கூறியுள்ளனர்.
ரூ.2 லட்சம்-5 பவுன் நகை கொள்ளை
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா பயந்துபோய் 3 பேரையும் வீட்டிற்குள் செல்ல அனுமதித்துள்ளார். பிறகு அவர் தனது செல்போனை எடுத்து இதுபற்றி கணவருக்கு தகவல் தெரிவிக்க முயற்சி செய்துள்ளார். அதைப்பார்த்த ஆசாமிகள் ஜெயலலிதாவிடமிருந்த செல்போனை பறித்து வைத்துக்கொண்டு, “நாங்கள் போகும்வரை யாருக்கும் போன் செய்யக்கூடாது” என மிரட்டியுள்ளனர். பிறகு வீட்டிலிருந்த படுக்கை அறைக்குச் சென்று, அங்கிருந்த பீரோவை திறந்து சோதனை செய்வதை போல் நடித்துள்ளனர்.
அப்போது கட்டிலின் மீது வைத்திருந்த 5 பவுன் நகையையும், கட்டிலுக்கு அடியில் துணிப்பையில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தையும் அவர்கள் கொள்ளையடித்தனர். பின்னர் நாங்கள் உங்கள் கடைக்குச் சென்று சோதனை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு, வீட்டிற்கு வெளியே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி சென்றுவிட்டனர்.
போலீசார் விசாரணை
இதனால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத ஜெயலலிதா, இது குறித்து கணவரிடம் செல்போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து மளிகைக்கடையில் இருந்து வந்த, தண்டபாணி, தாரா புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்மணி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் 3 பேரும் நெல்லை தமிழ் பேசியதாக தெரியவந்துள்ளதால், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் தேடிவருகின்றனர்.
மேலும் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகள் வந்த காரின் எண் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் ஆய்வு செய்துவருகிறார்கள். தாராபுரத்தில் பட்டப்பகலில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மளிகை கடைக்காரர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்டிலுக்கு கீழ் வைத்த பணம்
தண்டபாணி மளிகைக்கடையில் இருந்த ரூ.2 லட்சத்தை நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அதை கட்டிலுக்கு அடியில் வைத்துள்ளார். பின்னர் கையில் போட்டு இருந்த 5 பவுன் கைச்சங்கிலியையும் (பிரெஸ்லெட்) கழற்றி வைத்து விட்டு தூங்கிவிட்டார். பிறகு காலையில் கைச்சங்கிலியை கையில் போடாமல், எழுந்து கடைக்கு சென்றுவிட்டார். மனைவியிடம் பணம் வைத்திருப்பதை சொல்லாமல், கைச்சங்கிலியை கழற்றி வைத்ததை மட்டும் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில்தான் வீட்டிற்கு வந்த மர்ம ஆசாமிகள் கட்டிலுக்கு அடியில் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் நகையை எடுத்துச் சென்றுவிட்டனர். அப்போது ஜெயலலிதாவிற்கு பணம் பறிபோனது தெரியவில்லை. நகை பறிபோனதை பற்றி கணவருக்கு தெரிவித்தபோதுதான், பணமும் பறிபோயிருப்பது ஜெயலலிதாவிற்கு தெரிய வந்துள்ளது.
கைவிலங்கு, கோப்புகளை விட்டு சென்ற ஆசாமிகள்
மர்ம ஆசாமிகள் விட்டுச்சென்ற கைவிலங்கு மற்றும் ஆவணங்கள் வைத்திருந்த கோப்புகள்.
மர்ம ஆசாமிகள் தாங்கள் கொண்டு வந்த ஆவணங்கள் அடங்கிய கோப்புகளையும், கைவிலங்கையும் அவசரத்தில் தண்டபாணி வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். ஆவணங்கள் இருந்த கோப்பில் வருமான வரித்துறை அலுவலக முகவரியில் போலியான சர்ச்வாரண்ட் மற்றும் டேக்ஸ் இன்வெஸ்டிகேசன் ஆர்டர்களை (வரி கட்டாதது தொடர்பான சோதனை செய்யும் அதிகாரம்) அச்சிட்டு வைத்திருந்தனர். அதில் பல முக்கிய பிரமுகர்களின் பெயர் மற்றும் முகவரி இருப்பது தெரியவந்துள்ளது. மர்ம ஆசாமிகள் அடுத்தடுத்து வெளியூரில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் இதே போன்று ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்துச் செல்ல திட்டமிட்டிருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.