வெள்ளகோவிலில், மூதாட்டி வீட்டில் இருந்து 11½ பவுன் நகைகள் திருடிய பெண் கைது
வெள்ளகோவிலில் மூதாட்டியின் வீட்டில் இருந்த 11½ பவுன் நகைகளை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளகோவில்,
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள காடையூரான் வலசை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது தாயார் சின்னம்மாள் (வயது 80.) இவர் காடையூரான் வலசில் தனியாக வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் கோவை போத்தனூர் செட்டிப்பாளையத்தை சேர்ந்த நாகலட்சுமி (60) என்பவரின் மகள் ரேணுகா வசித்து வருகிறார். மகள் ரேணுகா வீட்டுக்கு நாகலட்சுமி அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இவ்வாறு வந்த போது சின்னம்மாளுடன் நாகலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் தனது மகள் ரேணுகாவை பார்க்க வந்த போதெல்லாம் சின்னம்மாளை சந்தித்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.
11½ பவுன் நகை திருட்டு
இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி நாகலட்சுமி தனது மகள் ரேணுகா வீட்டுக்கு வந்தார். அப்போது சின்னம்மாள் வீட்டுக்கு இரவு 10 மணிக்கு சென்று வழக்கம் போல் அவருடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் சென்று விட்டார். மறுநாள் காலையில் சின்னம்மாள் எழுந்து பார்த்த போது வீட்டின் பீரோ திறந்து கிடந்தது. அத்துடன் பீரோவின் உள்ளே வைத்திருந்த இருந்த சின்னம்மாளின் தங்க தாலிக்கொடி, தங்க வளையல், மோதிரம் ஆகிய 11½ பவுன் நகைகளை காணவில்லை.
இது குறித்து சின்னம்மாளின் மகன் சாமிக்கண்ணு வெள்ளகோவில் போலீசில் புகார் தெரிவித்தார். அதில் தனது தாயாரின் நகைகளை நாகலட்சுமி தான் திருடி விட்டார் என தெரிவித்திருந்தார்.
பெண் கைது
இது தொடர்பாக வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து போத்தனூர் செட்டிப்பாளையத்தில் உள்ள நாகலட்சுமி வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது நாகலட்சுமி வீட்டின் குளியலறையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நகையை போலீசார் மீட்டனர். இந்த திருட்டு தொடர்பாக நாகலட்சுமியை வெள்ளகோவில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.