விசைப்படகு மீது கப்பல் மோதல்; குமரி மீனவர் உள்பட 3 பேர் பலி
கொச்சி துறைமுகம் அருகே கடலில் விசைப்படகு மீது கப்பல் மோதியதில் குமரி மீனவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். விபத்தை ஏற்படுத்திய பனாமா நாட்டு கப்பலை பிடித்து கடற்படையினர் விசாரித்து வருகின்றனர்.
குளச்சல்,
குமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்தவர்கள் நேவிஸ், எர்னிஸ். இவர்களுக்கு சொந்தமான விசைப்படகில் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து 14 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
அந்த படகில் குளச்சல், வாணியக்குடி பகுதிகளை சேர்ந்த ஆன்டனி ஜான் (வயது 57), நேவிஸ், எர்னிஸ், மெர்லின், பிரிட்டோ, சசிமோன், ஆன்றோஸ், மிக்கேல், ஜெயபிரதீப், நெல்சன், ஆன்டனி, மிடாலத்தை சேர்ந்த வில்சன், அசாம் மாநிலத்தை சேர்ந்த மோடி, ராகுல் ஆகிய 14 பேர் இருந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு கொச்சி துறைமுகம் அருகே படகை நங்கூரமிட்டு நிறுத்தி இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற பனாமா நாட்டை சேர்ந்த ஒரு பெரிய சரக்கு கப்பல் மீனவர்களின் படகு மீது பயங்கரமாக மோதியது.
3 பேர் பலி
இதில் அந்த படகு உடைந்து அதில் இருந்த 14 மீனவர்களும் கடலில் விழுந்தனர். இதில் குளச்சலை சேர்ந்த மீனவர் ஆன்டனி ஜான், அசாம் மாநிலத்தை சேர்ந்த மோடி, ராகுல் ஆகியோர் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற 11 பேரும் படுகாயத்துடன் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொச்சியில் இருந்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையைச் சேர்ந்தவர்கள் விபத்து நடந்த இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த 11 மீனவர்களை மீட்டு படகு மூலம் கரைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த மீனவர்களுக்கு கொச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களில் ஆண்டனி ஜான், ராகுல் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. தண்ணீரில் மூழ்கிய மோடியின் உடலை தேடி வருகிறார்கள்.
கப்பலை மடக்கி பிடித்தனர்
இதற்கிடையே மீனவர்களின் படகு மீது மோதிய பனாமா நாட்டு கப்பல் விபத்து நடந்ததும் கப்பலில் இருந்த மின்விளக்குகளை அணைத்து விட்டு தப்பி செல்ல முயன்றது.
ஆனால், இந்திய கடற்படையினர் கப்பலை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து, அந்த கப்பலில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்தில் பலியான குளச்சல் மீனவர் ஆன்டனி ஜானுக்கு சுஜா என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். ஆன்டனி ஜான் பலியான தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மிகுந்த சோகம் அடைந்துள்ளனர்.