மின்வாரியத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

மின்வாரியத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மின்வாரிய அம்பேத்கர் தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-06-11 22:15 GMT
விழுப்புரம்,

தமிழ்நாடு மின்வாரிய அம்பேத்கர் தொழிலாளர் சங்கத்தின் 16-வது மாநில பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் ஆதிதிராவிடர் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சிவபாலன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர்கள் சிவக்குமார், மாரியப்பன், துணைத்தலைவர்கள் செல்வநாதன், சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் சாமி, பொருளாளர் அசோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில், மின்வாரியத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில, மண்டல நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் மண்டல நிர்வாகி சாமித்துரை நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்