சிதம்பரத்தில் டி.டி.வி.தினகரன் உருவபொம்மையை எரிக்க முயற்சி தீபா பேரவையினர் திடீர் போராட்டம்
போயஸ் கார்டனுக்கு சென்ற ஜெ.தீபா தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சிதம்பரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தீபா பேரவையினர் டி.டி.வி. தினகரின் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புவனகிரி,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா நேற்று போயஸ் கார்டனுக்கு திடீரென வந்தார். அங்கு அவர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தான் தாக்கப்பட்டதாகவும், தீபா பேட்டியளித்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து, கடலூர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் சிதம்பரத்தில் காந்தி சிலை அருகே அ.தி.மு.க துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரனை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தீபா பேரவை கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் எம்.ஜி.மணிவண்ணன் தலைமை தாங்கினார்.
உருவபொம்மையை எரிக்க முயற்சி
இதில் டி.டி.வி. தினகரனுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள், திடீரென அவரது உருவ பொம்மையை எடுத்து வந்து எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் உருவ பொம்மையை எரிக்க விடாமல் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதில் ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் கலியமூர்த்தி, நாகவேல், தங்கப்பட்டுசாமி, கல்யாணசுந்தரம், ஏ.கே.மூர்த்தி, சிவக்குமார், கணேசமூர்த்தி, ராதாகிருஷ்ணன், காமராஜ், செல்வக்குமார், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.