ஸ்ரீமுஷ்ணத்தில் வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது. டி.வி.புத்தூர் கிராமம். இந்த கிராமத்தின் வழியாக வெள்ளாறு ஓடுகிறது. இதில் டி.வி.புத்தூரில் இருந்து அள்ளூர் வரைக்கும் ஆற்றில் மணல் அள்ளியதால், அந்த பகுதியே தற்போது பாலைவனம் போல் இருக்கிறது. இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்துக்கு சென்றுவிட்டதால், விவசாயம் மற்றும் குடிநீருக்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில், கூடலையாத்தூர் மற்றும் மதகளிர் மாணிக்கம் ஊராட்சிகளில் வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்து, அதற்கான பணியை மேற்கொண்டனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, குவாரி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் தற்சமயம் குவாரி அங்கு அமைக்கப்படாமல் உள்ளது.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மதகளிர்மாணிக்கம், கூடலையாத்தூரில் குவாரி அமைக்கும் முயற்சியை நிரந்தரமாக அரசு கைவிடக்கோரியும், இந்த பகுதியில் உள்ள மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க கோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஸ்ரீமுஷ்ணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பட்டுசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முத்தரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினார். இதில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சுப்பிரமணியம், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மணிவாசகம், நாகராஜன், சேகர், மாவட்ட துணை செயலாளர்கள் குளோப், காசிலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டு, கோரிக்கைளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் வட்ட செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
மணல் கொள்ளை
ஆர்ப்பாட்டம் முடிவில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதா வது:-
தமிழகம் முழுவதும் பல ஆண்டுகளாக ஆறுகளில் இயற்கை வளமான மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எஞ்சியிருக்கும் மணலையாவது காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இருப்பதாக தெரியவில்லை.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இனிமேல் மணல் குவாரியை அரசே ஏற்று நடத்தும் என்று அறிவித்து ஒரு மாத காலம் ஆகிறது. இதில் அரசு சார்பில் ஒரு யூனிட் மணல் ரூ.525க்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் சென்னையில் இந்த மணல் ரூ.18 ஆயிரம் வரையில் தனியாரால் விற்கப்படுகிறது. இதேபோன்று தமிழகத்தில் பல இடங்களில் இதுபோன்ற மிகப்பெரிய கொள்ளை நடக்கிறது.
சென்னை பெருநகர மக்களின் குடிநீர் தேவைக்காக பெருமளவு தண்ணீர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து எடுக்கப்படுகிறது. தற்போது, ஏரியில் தண்ணீர் இல்லாத நிலையிலும், பல்வேறு பகுதிகளில் பம்பு செட்டுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
சென்னைக்கு தண்ணீர் தர வேண்டியது அரசின் பொறுப்பு, கடமையாகும். இதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இங்கு பருவமழை காலங்களில் பெய்யக்கூடிய மழை நீரை சேமிக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவிலை. இதனால் கடலூர் மாவட்டம் பாலைவனமாகும் பேரபாயத்தில் உள்ளது.
தீவிரமாக எதிர்ப்போம்
ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வெள்ளாற்றில் பெருமளவில் மணல் எடுத்துவிட்டார்கள். மதகளிர்மாணிக்கம் கிராம பகுதியில் மட்டும் சிறிது மணல் எஞ்சியிருக்கிறது. அங்கே ஒரு மணல் குவாரி அமைத்து, அதையும் அள்ளி செல்ல அரசு அதிகாரிகள் தரப்பில் ஏற்பாடுகள் செய்கிறார்கள். இத்தகைய முயற்சிகளை எடுக்க கூடாது என்று கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.இதன் காரணமாக தற்போது அங்கு குவாரி அமைக்கப்படுவது தற்காலிகமாக கைவிடப்பட்டதாக தெரிகிறது. இதை நிரந்தரமாக கைவிட வேண்டும், மேலும் தொடர்ந்து அங்கு மணல் அள்ள நடவடிக்கை மேற்கொண்டால் கிராம மக்களோடு சேர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மிக தீவிரமாக அதை எதிர்த்து போராடும், பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மணல் அள்ளப்படுவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.